இராணுவத் தலைமையகத்தில் பிரதி அமைச்சர்!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அண்மையில் இராணுவத் தலைமையகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த அவரை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
இந்த விஜயத்தின்போது, இராணுவத் தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்குச் சென்ற பிரதி அமைச்சர், மறுசீரமைப்புச் செயன்முறை உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இராணுவத் தலைமையக அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் இராணுவப் பணியாளர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு, தொழில்முறைமை மற்றும் சேவையைப் பாராட்டினார்.
மேலும், இராணுவத்தின் ஏனைய நிலைச் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிரதிநிதிகளையும் பிரதி அமைச்சர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்புகளை நேரடியாகக் கேட்டறிந்த அவர், அவர்களுக்குத் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.