—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மின்னல் தாக்கம்: மக்கள் அவதான

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (22) வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (23) வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் சில பகுதிகளில் தற்காலிகமாகக் கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.