ஒரே வீட்டில் இருவர் ச**டலமாக மீட்பு

புஸல்லாவைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வீட்டிற்குள் கட்டிலில் வெட்டிக்கொ**லை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஆண் ஒருவர் வீட்டின் பின்புறத்தில் உயிரை மாய்த்த நிலையில் ச**டலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஸல்லாவைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்குள் கத்தியால் வெட்டிக் கொ**லை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்கு 119 அவசர அழைப்புப் பிரிவின் ஊடாகத் தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்போது, குறித்த பெண் தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தமை தெரியவந்துள்ளது. மேலும், குருநாகலைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் அவருடன் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த ஆண் அதே வீட்டின் பின்புறத்தில் உயிரை மாய்த்த நிலையில் ச**டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரு மரணங்களுக்குமான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், புஸல்லாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.