—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அஜித் படத்திலிருந்து சத்யராஜ் நீக்கமா?

அஜித் படத்திலிருந்து சத்யராஜ் நீக்கமா?

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திரைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி, தனது ‘பிரேவ் ஹோர்ட்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் ஊடாகத் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில் அஜித்துடன் ஸ்ரீலீலா, பார்த்திபன் மற்றும் பிரபு ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, பார்த்திபன் ஏற்கவுள்ள கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குநர் ஆதிக் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசியல் நடவடிக்கைகளை நடிகர் சத்யராஜும் அவரது மகள் திவ்யாவும் விமர்சித்து வருவதால், அஜித்தின் விருப்பத்தின் பேரில் சத்யராஜ் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் திரைப்படக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜித்துக்கும் விஜய்க்கும் இடையில் அண்மைக்காலமாக நெருக்கமான உறவு நிலவி வருவதாகக் கூறப்படும் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.