—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை ஒத்திவைப்பு!

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிர்ணயிக்கப்பட்ட ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர், எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அவற்றை நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்பத் திருத்தியமைத்து, ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படாததால், திட்டமிட்டபடி நவம்பர் 3ஆம் திகதி அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது போனது என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.