—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மழைநீரால் பாதிக்கப்படும் வைத்தியசாலைச் சூழல்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் மழைக்காலங்களில் தொடர்ச்சியாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

தற்போது பிராந்தியத்தில் மாரிகால மழை ஆரம்பித்துள்ள நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை வளாகத்திலும், வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான அணுகுபாதைகளிலும் மழைநீர் வடிந்தோட வழியின்றி அதிகளவில் தேங்கி நிற்கின்றது.

முறையான வடிகான் அமைப்பு இல்லாமையாலும், நீர் வழிந்தோடும் பாதைகள் அடைபட்டுள்ளமையாலும் தேங்கி நிற்கும் வெள்ளநீர் காரணமாக, வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள் மற்றும் தீவிர நோயாளிகள் நடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதுடன், வைத்தியசாலைச் சூழலில் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.

நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டும் அப்பகுதி மக்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, வைத்தியசாலை வளாகத்தில் தேங்கும் மழைநீரை அகற்றி, சீரான வடிகான் அமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.