—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ரொசிட்டா தோட்டத்தில் சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம்

தோட்டப் பகுதிகளிலும் பிரதேச சபையின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், தேர்தல் காலத்தில் புஷ்பா விஷ்வநாதன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, கொட்டகலை பிரதேச சபையின் விசேட குப்பை அகற்றும் வேலைத்திட்டம் இன்று ரொசிட்டா தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத்தின் ஒத்துழைப்புடன், பிரதேச சபை உறுப்பினரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவருமான புஷ்பா விஷ்வநாதனின் முன்னெடுப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு ரொசிட்டா தோட்ட உதவி முகாமையாளர் ரவிந்து மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாகும்.

நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டம், கொட்டகலை வட்டாரத்திலுள்ள ஏனைய தோட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.