26 பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்மழை மற்றும் மண்சரிவினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கிலும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments 0
Be the first to comment.