—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் யோகி பாபு கலகலப்பு

மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் யோகி பாபு கலகலப்பு

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு பிரமாண்டமாகத் திரைப்படத்தை வெளியிடுவதற்குப் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இந்தப் படத்தில் நயன்தாரா, ஊர்வசி, சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

நவம்பர் 6ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று சென்னையில் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு நடைபெற்றது. இதில் நயன்தாரா கலந்துகொள்ளாதது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் யோகி பாபு தனது பேச்சால் அனைவரையும் கலகலப்பாக்கினார்.

அவர் பேசுகையில், “சுந்தர்.சி அண்ணனிடம் குழந்தையாக வந்தேன். இப்போது எனக்கு மூன்று குழந்தைகள் ஆகிவிட்டன. குஷ்பூ அக்காவும் பார்த்து, ‘என்னடா, நாலாவதா?’ என்று கேட்டார்.

இருப்பதிலேயே பெரிய சொத்து குழந்தைச் சொத்துதான். அது கிடைப்பது மிகவும் கடினம். அது இல்லாமல் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘மீசையை முறுக்கு 2’ படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த ஹிப்ஹாப் ஆதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாகவும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். டிடி, ரெஜினா, இனியா என அனைவருக்கும் நன்றி. அவர்களுடன் ஏற்கெனவே இணைந்து நடித்திருக்கிறேன்.

அதேபோல், நடிகர் விச்சு அண்ணா எனது குருநாதர். சுந்தர்.சி படங்களில் எனக்கும் விச்சுவுக்கும் இடையே நிறைய சண்டைக் காட்சிகள் வரும். அவரை நீண்ட காலமாகச் சுந்தர்.சி நடிக்க வைத்திருக்கிறார்.

ஊர்வசி அக்காவின் ரசிகர்கள் நாங்கள். அவருடன் நீண்ட காலம் பயணிக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் பிரச்சினையே இல்லை; அதுவாகவே நல்லது நடக்கும்” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.