—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தேவா குடும்பத்தினருக்கு சூர்யா ஆறுதல்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவா கடந்த 17ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் திகதி தேவாவின் உடல் ஆற்காடு அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேவா மறைந்தபோது நடிகர் சூர்யா வெளியூரில் இருந்ததால், அவரால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. எனினும், சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை திரும்பிய நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் தேவாவின் வீட்டிற்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நடிகர் சூர்யா கதாநாயகனாக அறிமுகமான ‘நேருக்கு நேர்’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவாவே இசையமைத்திருந்தார். தொடர்ந்து, சூர்யா நடித்த மேலும் சில திரைப்படங்களுக்கும் தேவா இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.