அரசாங்கத்துக்கு ஆதரவாக மாத்தறையில் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில் மாபெரும் அமைதிப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
பௌத்த தேரர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்தும் வகையிலும், அரசின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சமூக ரீதியான வலுச்சேர்க்கும் வகையிலும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எவ்விதத் தயக்கமுமின்றித் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.

Comments 0
Be the first to comment.