—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அஸ்வெசும தொடர்பாக நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மக்களுக்கான நலன்புரி உதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதனை அமைச்சர் மறுத்துள்ளார். எனினும், அரசாங்கம் கூறுவதற்கு மாறாக மாவட்ட மட்டத்தில் நிலைமைகள் காணப்படுவதாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கானோர் தனது அலுவலகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், முன்னர் அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காத சிலருக்கு தற்போது உதவித்தொகை கிடைத்துள்ளதாகவும், முன்னர் உதவித்தொகை பெற்ற சிலருக்கு தற்போது அது கிடைக்காமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உதவித்தொகை கிடைக்காதவர்கள் தமக்குரிய உதவி கிடைக்க வேண்டும் எனவும், தகுதியற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கருதுபவர்கள் அது தொடர்பாகவும் பிரதேச செயலாளர் ஊடாக முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

முறைப்பாடுகள் ஊடாகத் தகுதியானவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், அஸ்வெசும திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.