வெளிஓயாவில் மீண்டும் குளவி தாக்குதல்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளிஓயா மேற்பிரிவில் இன்று (04) காலை நான்கு தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்றாவது தடவையாக இப்பகுதியில் குளவி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்களால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டும் அவர்கள், குளவிக் கூடுகளை அகற்றுவதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.