இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருந்த மிகப் பலம் வாய்ந்த “அர்னாப்” சூறாவளி தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கம் படிப்படியாகக் குறைவடையக்கூடும்.
இருப்பினும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்குப் புதிய அறிவித்தல் வரும் வரை மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களிலும், காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களும் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.
மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றருக்கும் அதிகமான உயரத்திற்கு எழும்பக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அச்சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Comments 0
Be the first to comment.