உயிர் பிரிந்தும் உயிர் கொடுத்த தாய்!

முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் 4ஆம் ஒழுங்கைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சண்முகம் இந்திரா என்பவரே இவ்வாறு உறுப்பு தானம் செய்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி மாஞ்சோலை பகுதியில் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவர் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அவர், முதலில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Comments 0
Be the first to comment.