—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

உயிருக்குப் போராடும் யானை: உடனடி மீட்பு கோரிக்கை!

உயிருக்குப் போராடும் யானை: உடனடி மீட்பு கோரிக்கை!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானையொன்று சேற்றில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வயல்வெளியில் உள்ள சேற்றிலிருந்து வெளியேற முடியாமல் யானை தவித்து வரும் நிலையில், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த யானையின் நிலைமை தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகக் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, யானையின் உடல்நிலையை நேரில் பரிசோதித்து, அதனைச் சேற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தேவையான அவசர சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.