எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதி
நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று (04) காலை தலவாக்கலை நகரிலுள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு அருகில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்காகத் தங்களது வெற்றுச் சிலிண்டர்களை வரிசையாக வைத்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.
தலவாக்கலை நகரிலுள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு இன்று எரிவாயு வரவுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் தங்களது அன்றாடத் தொழில்களையும் இழந்து, கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் காத்திருக்கின்றனர்.
எதிர்வரும் 8ஆம் திகதி தமிழர்களின் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், எரிவாயுவைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாத வகையில், அனைவரும் பயன்பெறும் விதத்தில் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.