எரிவாயு வாங்கக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் அடுத்த மூன்று நாட்களில் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெற்றிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயுவை ஏற்றி வந்த ‘கொரின்தியன்’ என்ற கப்பல் நேற்று வியாழக்கிழமை (22) நாட்டை வந்தடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, சந்தைக்கு 350,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த எரிவாயுச் சரக்கின் வருகையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் எவ்விதத் தடங்கலுமின்றி முன்னெடுக்கப்படும் எனவும், நுகர்வோர் வழக்கம்போல் எரிவாயு சிலிண்டர்களைக் கொள்முதல் செய்ய முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சமடைந்து எரிவாயு சிலிண்டர்களை மேலதிகமாகக் கொள்முதல் செய்வதையோ அல்லது சேமித்து வைப்பதையோ தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments 0
Be the first to comment.