—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது

போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருட்களைக் கடத்திய இரு சந்தேகநபர்கள் கெப்பட்டிபொல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 106 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸை, தெலவல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போம்புரு எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, மோட்டார் சைக்கிளில் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 124 கிராம் 500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் குறித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பகஸ்தோவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.