—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

காதல் விவகாரத்தில் இளைஞர் உ**யிரிழப்பு!

காதல் விவகாரத்தில் இளைஞர் உ**யிரிழப்பு!

காலி, இக்கடுவைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் வெள்ளிக்கிழமை (30) புகுந்த இனந்தெரியாத நபர்கள், இளைஞர் ஒருவரை வாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இக்கடுவைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உ**யிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்ததை அடுத்து, தாக்குதலை நடத்திய நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடே இந்தச் சம்பவத்துக்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.