—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கொழும்பில் தொழிற்சங்கங்கள் போராட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுக்கு எதிராக நேற்று (29) வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

கோட்டை ரயில் நிலையச் சூழலில் திரண்ட போராட்டக்காரர்கள், அரசின் புதிய சட்டவரைவுக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியதுடன், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்தப் புதிய சட்டவரைவானது நாட்டின் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக அமைப்பைக் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்தச் சட்டவரைவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.