—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

திடீர் சோதனையில் மூவர் சிக்கினர்

திடீர் சோதனையில் மூவர் சிக்கினர்

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் சாரதிகளை இலக்கு வைத்து நேற்று (29) வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையில், மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னி மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில், மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோரைக் கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையின்றிப் பொறுப்புடன் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாகன சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என மொத்தம் 110 பேர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் (30) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.