சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட நால்வர் சிக்கினர்

அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நால்வரை திறப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 52 வயதுக்குட்பட்ட திறப்பனை, குருதெனியா மற்றும் எப்பாவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திறப்பனை பொலிஸ் பிரிவின் விஹாரை சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஹாரை சந்திப் பகுதியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் பழங்காலப் பொருட்களை மீட்கும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த நான்கு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திறப்பனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.