—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

20 கோடி ரூபாய் போ**தைப்பொருள் மீட்பு

20 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போ**தைப்பொருட்களை பூநகரி பொலிஸார் மீட்டுள்ளனர்.

பூநகரி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த போ**தைப்பொருட்கள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர்.

எனினும், குறித்த மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தாமல் பயணித்ததால், பொலிஸார் அவற்றைத் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது, போ**தைப்பொருட்களை வீசிவிட்ட நான்கு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

பூநகரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசேல குணதிலக தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போ**தைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், 13 கிலோ 950 கிராம் ஹெரோயினும், 1,040 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 20 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையை கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர பாராட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட போ**தைப்பொருட்கள் தொடர்பில் பூநகரி பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், அவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போ**தைப்பொருட்கள் மீட்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.