—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சுற்றறிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சுற்றறிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளைத் திரிபுபடுத்தி, பொய்யான மற்றும் போலியான தகவல்களைச் சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு செய்திப் பரிமாற்றச் செயலிகள் ஊடாகப் பரப்பும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

எனவே, அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்போது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை மட்டுமே சரியானவை மற்றும் நடைமுறையில் உள்ளவை எனக் கருதுமாறு பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போலியாகத் தயாரிக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் தகவல்களால் ஏமாற வேண்டாம் என்றும், இத்தகைய பொய்யான பிரசாரங்களைப் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.