—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செய்முறைப் பரீட்சைக்கு மாற்றுத் திகதி

செய்முறைப் பரீட்சைக்கு மாற்றுத் திகதி

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் சமூகமளிக்க முடியாத சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (27) செவ்வாய்க்கிழமை அழகியல் பாட செய்முறைப் பரீட்சை நடைபெறுகின்றது.

குறித்த பரீட்சைக்கு அனர்த்தங்கள் காரணமாகச் செல்ல முடியாமல் போனதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்பியவுடன், குறித்த செய்முறைப் பரீட்சைக்கான மாற்றுத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.