—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சுற்றாடல் பிரச்சினைகளுக்காகப் புதிய குழுக்கள் அமைப்பு!

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

முத்துராஜவெல சதுப்புநிலப் பகுதிகள், பமுனுகம கடற்கரைப் பகுதிகளில் நிலவும் சூழல் மாசடைதல் மற்றும் சீதுவ, லியனகேமுல்ல பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இந்தப் பகுதிகளில் இடம்பெறும் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

குறித்த சுற்றாடல் பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய குழுக்களை அமைக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஆயர் ஜே. டி. அந்தனி, அருட்தந்தை சிரில் காமினி, அருட்தந்தை நிலந்த ஹேஷான், நாடாளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, ஸ்டெபனி பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே. எம். விஜேபண்டார, சுற்றாடல் அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் கலாநிதி எம். ஜி. எம். பிரசன்ன, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) டி. பி. சி. உதய குமார, சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஐ. டப்லியூ. பி. சேனாரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.