—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ்.வை.எம். கோமஸ், ஏ.எல்.ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ்.எஸ்.எஸ்.பி.டி.எச். ஜயவர்தன மற்றும் பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கையளித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்தமையால் வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.