சுற்றிவளைப்பில் சிக்கிய மதுபானம்

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்மன பகுதியில், வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (22) வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபராவார்.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மதுபானம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.