—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செஃப் தாமு காலமானார்!

செஃப் தாமு காலமானார்!

இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவருமான செஃப் தாமு (Chef Damu), தனது 72ஆவது வயதில் இன்று (ஒக்டோபர் 25) காலமானார்.

செஃப் தாமு எனப் பிரபலமாக அறியப்படும் கே. தாமோதரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த இவர், சமையல் துறையில் பல தசாப்தங்களாகப் பணியாற்றியதுடன், பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களிடையே பிரபலமானார்.

2010ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் சமையல் செய்து, 617 உணவு வகைகளைத் தயாரித்ததன் மூலம் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கிக் கௌரவித்தது. மேலும், சமையல் தொடர்பான கல்வி மற்றும் பயிற்சித் துறைகளிலும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.