விஜய் குறித்த சர்ச்சைப் பேச்சு: கவுன்சிலர் மீது விசாரணை

தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சூழலில், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் டிட்டா சரவணன் என்பவர் மீதே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, “கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என டிட்டா சரவணன் கேள்வி எழுப்பிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்தக் கருத்து தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டிட்டா சரவணனிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments 0
Be the first to comment.