—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தமிழருக்கு பிரதமர் பதவி கிடைக்குமா?

தமிழருக்கு பிரதமர் பதவி கிடைக்குமா?

இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை (30) வருகை தந்த துணை ஜனாதிபதி, விசேட சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இக்கருத்தை வெளியிட்டார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்,

"இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும் நாட்டின் பிரதமராக வரும்போது, ஒரு தமிழரும் பிரதமராக வரமுடியும்.

ஒருநாள் தமிழர் ஒருவர் நிச்சயம் இந்தியப் பிரதமராவார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரின் ஆட்சிப் பங்களிப்புகள் குறித்து அரசியலமைப்புச் சட்டப் பதவியிலுள்ள என்னால் கருத்துக்கூற முடியாது. அதற்குப் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் அது குறித்துக் கேட்டுக்கொள்ளலாம்.

இந்தியா உலகளவில் வல்லரசு நாடாவதைத் துரிதமாக நோக்கி நகர்கின்றது. அதனை உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. மதுரை மீனாட்சி அம்மனின் ஆசியால் அனைவருக்கும் நன்மையே நடக்கும். மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.