—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்

சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கட்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தப்பிச் சென்றவர்களைக் கண்டறிய 17 தனிப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இன்று (27) காலை நிலவரப்படி, சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு தலைமை காவலர்கள் உட்பட ஒன்பது சிறைத்துறை பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, கைதிகளில் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சிறை ஊழியர்கள் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றனர். அப்போது, அந்த அறையில் இருந்த 17 கைதிகளும் சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் மூன்று சிறை ஊழியர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.