—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செம்மணி விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!

செம்மணி விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி விவகாரத்தில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்குச் சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா, இந்தப் பரிந்துரையைப் பகிரங்கப்படுத்தினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான பணியாகும். அதனை நாங்கள் இடைவிடாது செய்து வருகின்றோம்.

செம்மணிப் புதைகுழி போன்ற விவகாரங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் மக்களுக்கு அதிகபட்ச நீதியைப் பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

குறிப்பாக, செம்மணிப் புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சர்வதேச உதவியைப் பெற வேண்டும் என்று ஆணைக்குழுவின் சார்பில் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளோம்.

எம்மால் முன்வைக்கப்படும் இந்தப் பரிந்துரைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்திச் செயற்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் அரசையே சாரும்” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.