ஜீ.எல். பீரிஸ் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Comments 0
Be the first to comment.