ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழு

2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின் கீழ், பாராளுமன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அதற்குத் தலைமைத்துவம் வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக 13 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கு அமைய, குழுக்களின் பிரதித் தலைவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 செப்டம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இக்குழுவில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர்களான சுனில் வடகல, கௌசல்யா ஆரியரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவத்துவல, அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், ஓஷனி உமங்கா, பிரகீத் மதுரங்க, சந்திமா ஹெட்டியாரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க, தேவானந்த சுரவீர மற்றும் எம். நிஸாம் காரியப்பர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.