ஞானசார விடுதலை கோரி போராட்டம்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வருகை தந்த தேரர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அன்றைய தினம் அங்கு கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்டபோது, பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்டம் நடைபெறும் இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகத் தங்கியிருந்த இந்தப் பிக்குகள், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகச் சென்று, அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
எனினும், அந்தக் கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகத் தெரிவித்த தேரர்கள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.