—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தனஞ்சனாவுக்குப் பதக்கம் கிடைத்ததா?

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க நான்காம் இடத்தைப் பெற்றார்.

T47 வகைப் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியை அவர் 12.60 செக்கன்களில் நிறைவு செய்தார். கடும் போட்டி நிலவிய இந்த இறுதிப் போட்டியில் அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை.

இதற்கு முன்னதாக, புதன்கிழமை (21) நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் ஓட்டப் போட்டியை 12.61 செக்கன்களில் நிறைவு செய்த தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றிருந்தார். இரண்டு தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றதால், இறுதிப் போட்டியில் அவர் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இறுதியில் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இந்தத் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் மற்றொரு வீராங்கனையான சந்துனி ஜயசுந்தர தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதேவேளை, T47 வகைப் பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் மொஹம்மத் சவ்ரான் 11.35 செக்கன்களில் ஓடி கடைசி இடத்தைப் பெற்றார்.

F40 வகைப் பிரிவு ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்கேற்ற மலீஷ சீமாஹேவகே 9.34 மீற்றர் தூரம் எறிந்து நான்காம் இடத்தைப் பெற்றார்.

அதேபோல், T42 வகைப் பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்ற சரித்த இந்த்ரபால 5.09 மீற்றர் தூரம் பாய்ந்து கடைசி இடத்தைப் பெற்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.