ஒரு பெண்ணிடம் சிக்கிய பெருந்தொகை போதைப்பொருள்!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய பெண் ஒருவர் களனி குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 45 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1 கிலோகிராம் 86 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், மின் தராசு ஒன்றும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 850,000 ரூபா பணமும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் இன்று வியாழக்கிழமை (22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் களனி குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.