—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தமிழ்க் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்க் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இரு தரப்புகளையும் சேர்ந்த முக்கிய அரசியல் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், மு. சந்திரகுமார், சி. வேந்தன் மற்றும் நா. இரட்ணலிங்கம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக, சந்திப்பின் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.