துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் ப**லி – இருவர் படுகாயம்

திருகோணமலை - கப்பல்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உ**யிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், திருகோணமலை, ஆண்டான்குளம் - பேதிஸ்புர பகுதியைச் சேர்ந்த ரத்ன விபுசன குலதுங்க ஆராய்ச்சிலாகே கயான் மனுசங்க (வயது 39) என்ற குடும்பஸ்தரே உ**யிரிழந்துள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு உடனடியாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.