ஹட்டனில் மீண்டும் எரிவாயு விநியோகம் – நீண்ட வரிசையில் மக்கள்!
மலையகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹட்டன் நகரில், சில நாட்களுக்குப் பின்னர் நேற்று (02) லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.
எனினும், குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களே விநியோகிக்கப்பட்டதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவனத்தினால் நேற்று நூறுக்கும் குறைவான சிலிண்டர்களே விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் பல வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாமல் போனதாகவும் விற்பனையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.