நயினாதீவு மகா வித்தியாலயத்தின் பெருவிழா
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு அமுத விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி நிகழ்வு 2026 ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தி. நிதர்சனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் நூற்றுக்கணக்கான முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர் பங்கேற்றனர்.
பாடசாலையின் 80 ஆண்டுகால கல்விப் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நடைபவனிக்கு, பாடசாலையின் முன்னாள் மற்றும் இந்நாள் கல்விச் சமூகத்தினர் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அமுத விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்நடைபவனி, பாடசாலையுடன் தொடர்புடைய பல தலைமுறையினரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.