—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நான்கு ஆண்டுகளுக்குப் பின் முகாம் அகற்றம்

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, நடுக்குடத்தனை பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீரென அகற்றப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த சிறப்பு அதிரடிப்படையினரும் வெளியேறியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும், முகாம் அமைந்திருந்த காலத்திலும் நாளாந்தம் நான்குக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.