பல மாகாணங்களில் கனமழை அபாயம்

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான மழைநிலை காணப்படுகின்றது.
மழை வீழ்ச்சிப் பதிவுகள்
- கரந்திபோவல் (புத்தளம்) – 195.7 மி.மீ.
- குளியாப்பிட்டிய – 193.0 மி.மீ.
- இலுப்பைக்கடவை – 187.5 மி.மீ.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘அர்னாப்’ சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான தாக்கம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments 0
Be the first to comment.