—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – நான்கு மாணவர்கள் காயம்

ஹட்டன் – போடைஸ் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் படலகல பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா ஹோர்ன்சி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறிய மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நான்கு மாணவர்களும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்றபோது, சாரதியுடன் சேர்த்து ஆறு மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிரே வந்த மற்றொரு முச்சக்கர வண்டிக்கு வழிவிட முற்பட்டபோது, முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக அதன் சாரதி தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.