கப்பல் பயணக் கட்டணம் ரூ.5,500 ஆகக் குறைப்பு
நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கெனப் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கேசனத்துறை பகுதியில் அமைந்துள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் இந்திய ரூபாய் 5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
பயணிகள் தங்களது பயணப் பொதிகளில் 30 கிலோ வரையான செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரையான கைப்பைகளை (Hand Luggage) எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்ல முடியும்.
30 கிலோவுக்கு மேற்பட்ட மேலதிக எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் அறவிடப்படும்:
- 5 கிலோ – ₹1,500 (LKR 5,250 / USD 16)
- 10 கிலோ – ₹2,500 (LKR 8,750 / USD 26)
- 30 கிலோ – ₹6,000 (LKR 21,000 / USD 63)
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்க முடியும்.
நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை (Economy) கட்டண விபரங்கள்:
- பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58
- குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53
காங்கேசனத்துறை – நாகப்பட்டினம் (Economy மற்றும் Pre Eco) கட்டண விபரங்கள்:
- Economy – பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58
- Economy – குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53
- Pre Eco – பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64
- Pre Eco – குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58
நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தித் தங்களது பயணங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் மழைக்காலத்தில் கப்பல் சேவை நிறுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments 0
Be the first to comment.