—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

புயல் தாக்கம் படிப்படியாகக் குறையும்

புயல் தாக்கம் படிப்படியாகக் குறையும்

இலங்கையில் நிலவும் வானிலையில் ‘அர்னாப்’ அதிதீவிரப் புயலின் தாக்கம் இன்று புதன்கிழமை முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ‘அர்னாப்’ புயல் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்தது.

இந்தப் புயல் இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.