—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பேருந்து சாரதி மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

பேருந்து சாரதி மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

களுத்துறை–கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் சொகுசுப் பேருந்து ஒன்றை மறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களைக் களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இத்தாக்குதலை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாத்துவ மற்றும் மொரந்துடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.