போ*தை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (27) பெருமளவான போ*தை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் – மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அருகிலிருந்து குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
இதன்போது, 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் 500 போ*தை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.